#பனை_மரம் #பனை_கிழங்கு
இதுவரை கலப்படம் செய்ய படாத ஒரே #மரம்_பனை மரம் மற்றும் அதன் #உணவுகளான_நொங்கு_பனங்கிழங்கு மட்டுமே!!
#18_தமிழ் சித்தர்கள் கற்பக விருட்சம் என்று போற்றிய அற்புத மர வகைகளில் “பனை மரமும்” ஒன்று. கற்பக விருட்சம் என்றால், அந்த விருட்சம், அதாவது மரத்தின் அனைத்து பகுதிகளுமே மனித குலத்துக்கு அதிகம் பயன் தரக் கூடியது. அதை குறிப்பிட்ட கால அளவில், சித்தர்கள் சொன்ன முறையில் சாப்பிட்டு வர, உடல் காய கற்பமாகும், உடல், நோய்கள் நீங்கி, மனிதன் நெடுநாள் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும். அத்தகைய ஒரு கற்ப மரம்தான் “#பனை_மரம்”.
#எப்படி_சாப்பிட_வேண்டும்_பனஙகிழங்கை!
வேக வைத்த பனங் கிழங்கின் தோலை உறித்தபின், நடுவில் காணும் தும்பு எனப்படும் நரம்பு போன்ற பாகத்தை நீக்கி விட்டு சாப்பிடலாம். பனை மரத்தில் உள்ள நுங்குகளை அப்படியே விட்டால் அவை பழுத்துக் கனியாகும், அவையே பனம் பழம் ஆகும். இவற்றிற்கெல்லாம் நிகரான நலன்கள் பயப்பது, ஆயினும் அதிகம் பேர் விரும்பிச் சாப்பிடுவது, பதநீர், நுங்கு மற்றும் பனங் கிழங்குகளே!
#பனங்கிழங்கின்_நன்மைகள் :
. நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த கிழங்கில், ஒரு பெரிய பனைமரத்தின் நற்த் தன்மைகளே அதிகம் உள்ளதால், இதைச் சாப்பிட்டால் நமக்கு நல்ல பலம் கிடைத்துவிடுகின்றது.
#மலச்சிக்கலை_போக்கும் :
உடல் இளைத்தவர்கள் கூட பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான உடல் பருமன் பெற்று பொலிவுடன் திகழ்வார்கள். உடலுக்கு குளிர்ச்சித் தன்மை அளிக்கும், மலச் சிக்கலை போக்கக் கூடியது. நாம் நீரில் சேர்க்கும் உப்பைப் பொறுத்து இந்த கிழங்கின் ருசி இருக்கும்..
#உடலுக்கு_வலு : பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ள இதைச் சாப்பிட்டப் பின் சிறிது மிளகு மற்றும் பூண்டுகளை கலந்து சாப்பிட்டு வரலாம்.. மற்றபடி பனங் கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேலோங்கும்.
#இரும்புச்_சத்து : பனங்கிழங்கை சிறிது மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, பின்னர் கிழங்கை வெயிலில் காய வைத்து, அதை, மாவாக்கி, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, உடலுக்கு தேவையான இருப்புச்சத்து கிடைத்து, உடல் வலுவாகும்.
#கர்ப்பப்பை : இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட பெண்களின் கர்ப்பப்பை வலுப் பெறும் மற்றும் உடல் உள் உறுப்புகள் நலம் பெரும். சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களும், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களும் மாவை உணவில் சேர்த்துவர, பலன்கள் தெரியும். இபோதெல்லாம், அவசரம் நிறைந்த காலை வேளையின் பரபரப்பின் காரணமாக, பாரம்பரிய காலை சிற்றுண்டிக்கு பதில் மேலை நாட்டு உணவான ஓட்ஸ் கஞ்சி அல்லது சோளப் பொறி வகைகளையே அதிகம் பேர் எடுத்துக்கொள்கிறார்கள்.
#பனங்கிழங்கு_கஞ்சி : இவர்களெல்லாம் நம் நாட்டில் இயற்கை முறையில் கிடைக்கும் பனங்கிழங்கு மாவில் கஞ்சியோ அல்லது கூழோ செய்து காலையில் சாப்பிட்டு வர, பசி நீங்கும், உடலும் நோய் எதிர்ப்பு சக்தி பெறும்.
வேக வைக்காத பணக்கிழங்கை வெயிலில் காயவைத்து, அரைத்து மாவாக்கி சேகரித்து வைத்துக் கொள்ள, தேவைக்கேற்ப இந்த மாவை கூழாக்கி சாப்பிடலாம், தோசையாக சாப்பிடலாம் அல்லது உப்புமா செய்தும் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு ஒரு சிறந்த மலமிளக்கி மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது
Reviews
There are no reviews yet.